அனுமன் ஜெயந்தி; ஊத்தங்கரை ஆஞ்சநேயருக்கு 500 லி., பாலில் அபிஷேகம்

ஊத்தங்கரை ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு 500 லிட்டர் பாலில் அபிஷேகம் நடந்தது.

Update: 2024-01-11 02:56 GMT

ஊத்தங்கரை ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு 500 லிட்டர் பாலில் அபிஷேகம் நடந்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை மகளிர் காவல் நிலையம் அருகே உள்ள ஆஞ்சநேயர் சுவாமி திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த திருக்கோவிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு அதிகாலை முதலே சிறப்பு வழிபாடுகள் அதிகாலை 4 மணி முதல் தொடங்கியது.

ஞ்சநேயர் சுவாமி சன்னதியில் மூலவருக்கு அதிகாலையில் அபிஷேகமும் காலை 6 மணிக்கு மணிமண்டபத்தில் வீற்றிருக்கும் ஆஞ்சநேயருக்கு 500 லிட்டர் பால், 300 இளநீர், தயிர், தேன், பல வகைகளை கொண்ட பஞ்சாமிர்தம் அபிஷேகம்,மூலிகை திரவியங்கள், அபிஷேகம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்று வடை மாலைகள் சாத்தப்பட்டது. அதனை தொடர்ந்து வேத பாராயணங்கள் அலங்கார ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் ராஜ அலங்காரத்தில் ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி பக்தர்களுக்கு சுவாமிஅருள் பாலித்தார். தொடர்ந்து அன்னதானமும் நடைபெற்றது.

மாலையில் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமி திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி தருவார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆஞ்சநேயர் சுவாமி திருக்கோவில் பக்தர்கள் ஊத்தங்கரை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டு வழிபாடு செய்து வருகின்றன.

Tags:    

Similar News