அனுமன் ஜெயந்தி விழா
சங்ககிரி நவ ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, இரண்டாம் நாளான இன்று ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.
சேலம் மாவட்டம், சங்ககிரி சந்தைபேட்டை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ நவ ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழாவின் 2வது நாளையொட்டி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு சங்ககிரி ஸ்ரீ நவ ஆஞ்சநேயர் கோயிலில் ஜன.11ம்தேதி வியாழக்கிழமை விழா தொடங்கியது. அதனையடுத்து ஜன.12 வெள்ளிக்கிழமை 2வது நாளையொட்டி சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், திருமஞ்சனம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருள்களைக்கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், வெண்ணை காப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிப்பட்டுச் சென்றனர். விழாக்குழுவினர் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஜனவரி 13 வடைமாலை மேலும் சந்தன காப்பு சேவையும், ஜனவரி14பழகாப்பு சேவையும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாட்டினை ஸ்ரீ நவ ஆஞ்சநேயா டிரஸ்ட் நிர்வாகிகள் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.