அனுமன் ஜெயந்தி சிறப்பு பூஜை - பக்தர்கள் தரிசனம்.
சங்ககிரி நவ ஆஞ்சநேயர் கோவிலில் நடைபெற்ற அனுமன் ஜெயந்தி 3ம் நாள் சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.;
Update: 2024-01-14 00:50 GMT
நவ ஆஞ்சநேயர்
. சேலம் மாவட்டம், சங்ககிரி, சந்தைபேட்டை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ நவ ஆஞ்சனேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழாவின் 3வது நாளையொட்டி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி ஸ்ரீ நவ ஆஞ்சனேயர் சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், திருமஞ்சனம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருள்களைக்கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. அதனையடுத்து இரவு சுவாமிக்கு வடைமாலை அணிவிக்கப்பட்டு பூஜை நடைபெற்றது. இரு பூஜைகளிலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிப்பட்டுச் சென்றனர். பக்தர்களுக்கு ஸ்ரீ நவ ஆஞ்சநேயா டிரஸ்ட் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.