வளைவு சாலையில் வேகத்தடை அமைப்பால் மகிழ்ச்சி
மொரங்கத்தில் வளைவு சாலையில் வேகத்தடை அமைக்கப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-02-24 09:27 GMT
வளைவு சாலையில் வேகத்தடை அமைப்பால் மகிழ்ச்சி
மல்லசமுத்திரம் ஒன்றியம், மொரங்கம் கிராமம், மல்லசமுத்திரம்– வையப்பமலை பிரதான சாலையில் அமைந்துள்ளது. இச்சாலையின் வழியாக தினமும் கணக்கில் அடங்காத அளவிற்கு எண்ணற்ற இருசக்கர, கனரக, இலகுரக வாகனங்கள் என எந்நேரமும் சென்ற வண்ணம் உள்ளது. எனவே, இங்குள்ள மிகப்பெரிய வளைவு சாலையில் அடிக்கடி விபத்துகள் நடந்து வந்ததால் இப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என மக்கள் பலமுறை அதிகாரிகளிடம் வலியுறுத்தியதின்பேரில் தற்சமயம், வளைவுசாலையில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. இதனால், மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.