அரிஸ்டாட்டில் அகாடமியில் இலவச நீட் பயிற்சி
அரிஸ்டாட்டில் அகாடமியில் 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி வழங்கப்படும் என அந்நிறுவன தலைவர் அறிவித்துள்ளார்.
விழுப்புரம் வி. மருதூர் பகுதியைச் சேர்ந்தவர் வினித் (22). முதுகலை பட்டதாரியான இவர் சென்னை பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி. ஆராய்ச்சி படிப்பு படித்து வருகிறார். கிராமப்புற ஏழை மாணவ- மாணவிகள் அரசுத்தேர்வுகளில் அதிகளவில் வெற்றி பெற தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் வினித், நீட் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு அளிக்கப்படுவ ல்தாக தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், விழுப்புரம் கே.கே.சாலை மாந்தோப்பு தெருவில் கடந்த 2022-ம் ஆண்டு அரிஸ்டாட்டில் அகாடமி கல்வி நிறுவனத்தை தொடங்கினேன். இதன் மூலம் அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு இலவசமாக 10-ம் வகுப்பு, பிளஸ்-1, பிளஸ்- 2 வகுப்பு, டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 வி.ஏ.ஓ. தேர்வு, சப்-இன்ஸ் பெக்டர் பணிக்கான தேர்வு ஆகியவற்றுக்கு இலவச பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறேன். இங்கு பயிற்சி பெற்ற பலரும் அரசுத்தேர்வு மற்றும் காவல் துறை தேர்வுகளில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தொடர்ந்து, அரசு பள்ளியில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு இலவச நீட் தேர்வு பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர் என்றார்.