மோசடியில் ஈடுபட்ட நிதி நிறுவன தலைவர் கைது
சிவகங்கை மாவட்டத்தில் ரூ.200 கோடி மோசடியில் ஈடுபட்ட நிதி நிறுவனத்தின் தலைவரை போலீசார் கைது செய்தனர்.
Update: 2024-02-25 12:41 GMT
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் மகிழ்ச்சி என்ற நிதி நிறுவனத்தில் டெபாசிட் செய்தால் கூடுதல் வட்டி தரப்படும் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இதனை நம்பிய சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள், 200 கோடி ரூபாய் வரை முதலீடு செய்தனர். கடந்த ஆண்டு திடீரென நிதி நிறுவனத்தினர் தலைமறைவாகினர். பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் சிவகங்கை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நிதி நிறுவன இயக்குனர்கள், பணியாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். ஏற்கனவே ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நிறுவன தலைவரான, ஈரோடு மாவட்டம், சூரம்பட்டி சிவக்குமார், என்பவரை பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி., ஸ்ரீராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.