செவிலியருக்கு முன்னால் சுகாதாரத்துறை அமைச்சர் இரங்கல்!
செவிலியர் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்திருப்பது மிகுந்த மன வேதனையை அளிக்கிறது ஆழ்ந்த இரங்கலை, ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன் என முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், தற்போதைய விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான டாகர்.சி.விஜயபாஸ்கர் இரங்கல் தெரிவித்துள்ளார்.;
By : King 24x7 Angel
Update: 2024-05-23 12:16 GMT
அமைச்சர் இரங்கல்
புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்றபோது நிலை தடுமாறி விபத்தில் சிக்கிய புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செவிலியர் ஜெயந்தி சம்பவ இடத்திலேயே பலியான கோர சம்பவம் நெஞ்சை பதற வைக்கிறது. எண்ணிலடங்கா உயிர்களை காக்கின்ற உன்னத பணியில் இருக்கும் செவிலியரே சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்திருப்பது மிகுந்த மன வேதனையை அளிக்கிறது எனவும் திருச்செந்தூரைச் சேர்ந்த செவிலியரின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், மருத்துவக் கல்லூரி நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை, ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன் என முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், தற்போதைய விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான டாகர்.சி.விஜயபாஸ்கர் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் மழைக்காலங்களில் பணிக்கு செல்லும்போதும், இல்லம் திரும்பும் போதும் மிகக்கவனமாக பாதுகாப்பாக பயணங்களை மேற்கொள்ளுங்கள் அறிவுறுத்திதுள்ளார்.