பேராவூரணியில் இதய நோய் பரிசோதனை முகாம் 

பேராவூரணியில் நடந்த இதய நோய் பரிசோதனை முகாமில் 18 பேர் மேல் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.

Update: 2024-02-04 02:57 GMT

தஞ்சாவூர் மாவட்டம்,  பேராவூரணி டாக்டர் ஜே.சி.குமரப்பா பள்ளியில், பெரம்பலூர், சிறுவாச்சூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை, பேராவூரணி கோக்கனட் சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் சங்கம், சபரி ப்ளெக்ஸ்  & பிரிண்டர்ஸ், நேதாஜி மருதையார் கல்வி அறக்கட்டளை இணைந்து,  இதய மருத்துவம் மற்றும் பொது மருத்துவ சிறப்பு முகாம்  நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, லயன்ஸ் சங்கத் தலைவர் எஸ்.ஏ.தெட்சிணாமூர்த்தி தலைமை வகித்தார். சாசனத் தலைவர் எம்.நீலகண்டன், மண்டலத் தலைவர் எஸ்.பாண்டியராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் தாளாளர்கள் சங்கத் தலைவர் முனைவர் ஜி.ஆர்.ஸ்ரீதர் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினர்.  இதில், மருத்துவர்கள் இஜாஸ் அகமது, பிரகாஷ், வெங்கடேஷ் மற்றும் மருத்துவக் குழுவினர் நோயாளிகளை பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கினர்.  தேவையானவர்களுக்கு, ரத்தத்தில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், இசிஜி, எக்கோ பரிசோதனை செய்யப்பட்டு, மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது.  இதில், 164 பேர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்றனர்.  பேர் மேல்சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.  முகாமில், வழக்குரைஞர் குழ.செ.அருள்நம்பி, லயன்ஸ் நிர்வாகிகள் ராஜ்குமார், கமலா கே.ஆர்.வி.நீலகண்டன், சி.க.கோவிந்தன், சபரி ஆ.குமார், ரமேஷ், ஜி.பிரதீஷ், எம்.எஸ்.ஆறுமுகம், எஸ்.பி.பழனிவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். லயன்ஸ் நிர்வாக அலுவலர் து.குமரன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News