வடதமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்
இன்றும், நாளையும் அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் ஒருசில இடங்களில் இயல்பை விட 3° – 5° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கடந்த 24 மணி நேரத்தில் சோலையார் (கோயம்புத்தூர்) 2, சிங்கம்புணரி (சிவகங்கை) 1 சென்டி மீட்டர் அளவுக்கு மழை பதிவாகியுள்ளது.புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.
அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் பொதுவாக இயல்பை விட 2° – 4° செல்சியஸ் அதிகமாக இருந்தது. வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 4° – 5° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருந்தது. கடந்த 24 மணி நேரத்தில் ஈரோடு மாவட்டத்தில் வெப்ப அலை வீசியது.
அதிகபட்ச வெப்பநிலை 12 இடங்களில் 40.0° செல்சியசுக்கு மேல் பதிவாகியுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை ஈரோட்டில் 43.0° செல்சியஸ், சேலத்தில் 41.6° செல்சியஸ், வேலூரில் 41.5° செல்சியஸ், தர்மபுரி & கரூர் பரமத்தியில் 41.2° செல்சியஸ், திருத்தணி & திருப்பத்தூரில் 40.8° செல்சியஸ், மதுரை விமான நிலையத்தில் 40.7° செல்சியஸ், திருச்சியில் 40.3° செல்சியஸ், மதுரையில் (நகரம்) 40.2° செல்சியஸ், கோயம்புத்தூர் (விமான நிலையம்) மற்றும் நாமக்கல்லில் 40.0° செல்சியஸ் பதிவாகியுள்ளது. தமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 35° – 39° செல்சியஸ் மற்றும் மலைப் பகுதிகளில் 23° –30° செல்சியஸ் பதிவாகியுள்ளது.
சென்னை மீனம்பாக்கத்தில் 37.3° செல்சியஸ் மற்றும் நுங்கம்பாக்கத்தில் 35.7° செல்சியஸ் பதிவாகியுள்ளது. குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்றும் நாளையும் தென் தமிழக மாவட்டங்கள்,
வட தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். வரும் 25 ஆம் தேதி தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். வரும் 26 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். இன்றும், நாளையும் அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் ஒருசில இடங்களில் இயல்பை விட 3° – 5° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில்,
ஒருசில இடங்களில் 39°–42° செல்சியஸ், இதர தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 35°–38° செல்சியஸ் இருக்கக்கூடும். வரும் 25 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் ஒருசில இடங்களில் இயல்பை விட 2° – 4° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 38°–41° செல்சியஸ்,
இதர தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 35°–38° செல்சியஸ் இருக்கக்கூடும். இன்று முதல் 27 ஆம் தேதி வரை காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50% ஆகவும், மற்ற நேரங்களில் 40-75 % ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-85 % ஆகவும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம். இன்றும், நாளையும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை என்று தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.