திருப்பூரில் கடும் பனிப்பொழிவு. பூக்கள் விலை அதிகரிப்பு

திருப்பூரில் கடும் பனிப்பொழிவு காரணமாக பூக்கள் வரத்து குறைவால் விலை அதிகரித்துள்ளது.

Update: 2024-01-22 09:50 GMT


பைல் படம்


கடும் பனிப்பொழிவின் காரணமாக பூக்கள் வரத்து திருப்பூர் சந்தைகளுக்கு குறைவாக வருவதால், விலை அதிகரித்துள்ளது. ஒரு கிலோ மல்லிகை ரூ.2400க்கு விற்பனையானது. திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களது அத்தியாவசிய பொருட்களை வாங்க தென்னம்பாளையம் மற்றும் பழைய பஸ் நிலையம் அருகே என காய்கறி மற்றும் மீன் சந்தை, பூ சந்தைகள் உள்ளன. இங்கு வருகிற பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்வது வழக்கம். இதனால் சந்தைகளில் கூட்டம் எப்போதும் இருக்கும். பண்டிகை காலங்களில் கூட்டம் சற்று அதிகமாக காணப்படும்.

இந்நிலையில் பூ சந்தைகளுக்கு பெரும்பாலும் திண்டுக்கல், நிலக்கோட்டை, திருப்பூர் மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படும். இந்நிலையில் தற்போது பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால், அனைத்து பூக்களின் வரத்தும் குறைந்துள்ளது. வரத்து குறைவின் காரணமாக விலையும் அதிகரித்துள்ளது. அதன்படி ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.2400&க்கு நேற்று விற்பனை செய்யப்பட்டது. இதுபோல் ஒரு கிலோ முல்லை ரூ.1000&க்கும், சம்பங்கி ரூ.80&க்கும், வாடாமல்லி ரூ.200&க்கும், ஜாதிமல்லி ரூ.800&க்கும், காக்கடா ரூ.400&க்கும், பட்டு ரூ.100&க்கும், அரளி ரூ.160&க்கும், செவ்வந்தி ரூ.80&க்கும் விற்பனை செய்யப்பட்டது. மற்ற நாட்களை விட விலை உயர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News