தர்மபுரியில் கொட்டி தீர்க்கும் கனமழை
தர்மபுரி சுற்றுவட்டார பகுதிகளில் இடைவிடாமல் கனமழை பெய்து வருகிறது.;
Update: 2024-05-17 07:32 GMT
தர்மபுரியில் மழை
தமிழகம் முழுவதும் கோடை வெயிலால் தவித்து வந்த சூழலில் கடந்த சில நாட்களாக வெப்ப சலனம் காரணமாக தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பொழிந்து வருகிறது இந்த நிலையில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில் பிற்பகல் 12:15 மணி முதல் தருமபுரி நகரப் பகுதிகளான அரசு மருத்துவமனை, நெசவாளர் காலனி, நான்கு ரோடு, பிடமனேரி, இலக்கியம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடைவிடாமல் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் மழைநீர் சாலைகளில் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது.