விளவங்கோடு பகுதியில் கனமழை
பேச்சிப்பாறை,பெருஞ்சாணி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
குமரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் இருபருவ மழை மட்டுமின்றி கோடை மழையும் தவறாமல் பெய்து வந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்த நிலை மாறி மார்ச் மாத தொடக்கத்திலேயே வெயில் சுட்டெரிக்க தொடங்கி விட்டது. இதே போல இந்த ஆண்டும் மார்ச் மாதத்தில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.
இடையே சில நாட்கள் மழை பெய்த நிலையிலும் வெப்பம் தணியவில்லை.இந்தநிலையில் கடந்த 4-ந் தேதி முதல் கத்திரி வெயில் தக தகவென தகித்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. மலையோர பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதேபோல் நேற்று குலசேகரம், அருமனை, திற்ப ரப்பு போன்ற பகுதிகளில் மழை பெய்தது.
மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் காலையில் இருந்தே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் அளவில் மழை பெய்ய தொடங்கியது. முதலில் சாரலாக தொடங்கிய மழை சிறிது நேரத்தில் பலத்த மழையாக மாறியது.அதிகபட்சமாக களியலில் 50.3 மி.மீ. மழை பதிவாகி இருந்தது. அணை பகுதிகளை பொறுத்த வரையில் பேச்சிப் பாறை-19.6 மி.மீ., வந்து கொண்டிருக்கிறதுபெருஞ்சாணி 14.4, சிற்றார் 1-42.4, சிற்றார் 2-38.2, மாம்பழத்துறையாறு-36, முக்கடல்-2 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது.
மழை காரணமாக பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 213.கனஅடி தண்ணீரும், பெருஞ் சாணி அணைக்கு வினா டிக்கு 44 கனஅடி தண்ணீரும், சிற்றார் 1 அணைக்கு வினா டிக்கு 39 கன அடி தண்ணீரும், சிற்றார் 2 அணைக்கு வினாடிக்கு 66 கனஅடி தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது.