கரூரில் பலத்த காற்றுடன் பெய்த கனமழை
கரூரில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
கரூரில் பலத்த காற்றுடன் பெய்த கனமழை. சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் மழை நீர். ஆந்திராவின் தெற்கு கடலோரம் மற்றும் அதை ஒட்டிய தமிழக வடக்கு கடலோர பகுதிகளில் மேல் வளிமண்டல கீழடுக்கில் சுழற்சியை நிலவுவதால் தமிழக முழுவதும் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் நேற்று முன்தினம் அறிவித்தது.
ஆனால் கரூர் மாவட்டத்தில் கடும் வெயில் வாட்டி வதைத்து வந்தது. நேற்று இரவு கரூர் மாவட்டத்தில் பரவலாக ஒரு சில இடங்களில் மழை பெய்த நிலையில் இன்று மதியம் ஒனேகால் மணியளவில் லேசான காற்றுடன் துவங்கிய மழை தற்போது தீவிர கனமழையாக மாறி உள்ளது. இதனால் வாகன போட்டிகள் பாதசாரிகள் சாலையில் நடக்க முடியாமல் அவதிப்பட்டனர். சிறிது நேரம் பெய்த கன மழையிலே சாலை எங்கும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. லேசாக துவங்கிய காற்று தற்போது பலமாக மாறி உள்ளது. மொத்தத்தில் கரூர் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.