திருவேங்கடம் பகுதிகளில் பலத்த மழை - விவசாயிகள் மகிழ்ச்சி

திருவேங்கடம் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் வெப்பம் நீங்கி குளிர்ச்சியான சூழல் நிலவியது.;

Update: 2024-05-15 02:31 GMT
 பலத்த மழை 

தென்காசி மாவட்டம் திருவேங்கடத்தில் கடந்த இருவாரங்களாக கடுமையான வெயில் நிலவியது. இரவிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்ததால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனா். சாலைகளில் பிற்பகலில் மக்கள் நடமாட்டம் மிகக் குறைவாகவே இருந்தது. இந்நிலையில் நேற்று காலை 8 மணிக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. தொடா்ந்து மாலை 4 மணி வரை வெப்பம் நீடித்தது. பின்னா், மாலை 4.30 மணி அளவில் கரு மேகங்கள் சூழ்ந்து இடிமின்னலுடன் கனமழை பெய்தது.

இந்த மழை தொடா்ந்து 1 மணி நேரம் நீடித்து 5.30 மணியளவில் குறைந்தது. சங்கரன்கோவில் பகுதியில் மட்டும் 40 மி.மீ. அளவுக்கு மழை பதிவானது. கனமழையால் சாலையில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், வாருகால் நிரம்பி அதன் கழிவு நீா் சாலைகளில் ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனா். கனமழையின் காரணமாக வெப்பம் தணிந்து குளிா்ந்த காற்றுவீசியது. மக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

Tags:    

Similar News