சிவகாசி: கடும் போக்குவரத்து நெரிசல்
சிவகாசி மாநகரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகரம் வாகன போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக உள்ளது.நகரின் முக்கிய சாலைகளான கீழ,மேல தெற்கு,வடக்கு ரதவீதி, திருத்தங்கல் மார்க்கெட் பகுதி ஆகிய சாலைகளில் நகை, பலசரக்கு கடைகள்,சூப்பர் மார்க்கெட்டுகள்,வங்கிகள் வணிக நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன.
போக்குவரத்து நெரிசல் கொண்ட இந்த சாலையில் கார்கள்,தள்ளுவண்டிகள் மற்றும் டூவீலர்கள் விதிமுறைகளை மீறி சாலையோரம் நிறுத்தி விட்டு செல்கின்றனர்.காலை மற்றும் மாலை நேரங்களில் அதிகளவிலான வாகனங்கள் நகரை கடந்து செல்கின்றன.சாலையோரம் நிறுத்தப்படும்வாகனங்களால் கார்கள்,டூவீலர்கள்,ஆம்புலன்ஸ்,ஆட்டோ சாலையை கடந்து செல்வதற்கு மிகவும் சிரமம் ஏற்படுகிறது.
போக்குவரத்து பாதிப்பு ஏற்படக்கூடிய முக்கிய இடங்களில் நோ பார்க்கிங் போர்டுகள் வைத்தும், விதிமுறையை மீறி வாகனங்கள் நிறுத்தப்படுதுவதால் ரதவீதிகள் பார்க்கிங் பகுதியாக மாறியுள்ளது.இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன்,சாலையில் நடந்து செல்லும் மாணவ,மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர். எனவே,போக்குவரத்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொண்டு சாலையோரம் விதிமுறையை மீறி நிறுத்தப்படும் வாகன ஓட்டிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.