தோவாளையில்  3 கிலோமீட்டர் தூரம் அணிவகுத்த கனரக வாகனங்கள் 

நெல்லையிலிருந்து குமரிக்கு வரும் வாகனங்களை தோவாளை - மயிலாடி விலக்கு பகுதியில் உள்ள எடை மேடையில் சோதனையிடப்பட்டன.;

Update: 2024-02-23 02:34 GMT
வரிசையில் நின்ற வாகனங்கள்
கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்லும் லாரிகளால் தொடர் விபத்துகளும் உயிர்பலிகளும் ஏற்பட்டு வந்தன. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் நான்கு பேர் உயிரிழந்தனர். அடுத்தடுத்து டாரஸ் லாரிகளால் ஏற்பட்ட விபத்து காரணமாக குமரி மாவட்டத்திற்குள் டாரஸ் லாரிகள்  வந்து செல்ல  கடந்த 20 ஆம் தேதி முதல் கட்டுப்பாடு அமலுக்கு வந்தது. இந்த கட்டுப்பாடு அமலுக்கு வந்த நாள் முதல் சோதனை சாவடிகளில் கூடுதல் போலீசார் நியமித்து கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.       நெல்லையிலிருந்து குமரிக்கு வரும் வாகனங்களை  தோவாளை - மயிலாடி விலக்கு பகுதியில் உள்ள எடை மேடையில் சோதனையிடப்பட்டன. ஒரே நேரத்தில் 300க்கு மேற்பட்ட லாரிகள் அங்கு கொண்டு செல்லப்பட்டது. இதனால்  சாலை இருபுறமும் வாகனங்கள்  வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டன. இதனால் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் வரிசையாக காணப்பட்டது.  இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் உருவானது.
Tags:    

Similar News