காஞ்சியில் எச்சரிக்கை சாதனங்கள் இன்றி செல்லும் கனரக வாகனங்கள்

காஞ்சியில் கனரகப் பொருட்களை ஏற்றி செல்லும் லாரிகள், சாலை வளைவில் திரும்பும் போது, வாகனம் கவிழ்ந்து விடும் அபாயம் உள்ளது போல் அச்சத்தை ஏற்படுத்துகிறது.

Update: 2024-07-02 12:21 GMT

சாலையில் செல்லும் கனரக வாகனங்கள்

காஞ்சிபுரம் கிழக்கு ரயில் நிலையத்தில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து, இரும்பு தொழிற்சாலைகளின் இரும்பு சுருள் மற்றும் இரும்பு பலகை இறக்குமதி செய்து, ஒரகடம், ஸ்ரீபெரும்புதுார், சுங்குவார்சத்திரம் ஆகிய தனியார் தொழிற்சாலைகளுக்கு ராட்சத லாரிகளில் எடுத்து செல்கின்றனர்.

இந்த வாகனங்களின் பின்புறத்தில், கனரகப் பொருட்கள் எடுத்து செல்கிறோம் என, எச்சரிக்கை துணி மற்றும் ஒளிரும் பிரதிபலிப்பான் அமைப்பதில்லை. குறிப்பாக, காஞ்சிபுரம் - செங்கல்பட்டு செல்லும் சாலையில், கனரகப் பொருட்களை ஏற்றி செல்லும் லாரிகள், சாலை வளைவில் திரும்பும் போது,

வாகனம் கவிழ்ந்து விடும் அபாயம் உள்ளது போல் அச்சத்தை ஏற்படுத்துகிறது. எனவே, கனரகப் பொருட்களை ஏற்றி செல்லும் போது, பின்னால் தொடர்ந்து செல்லும் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை செய்யும் விதமாக ரிப்பன் மற்றும் ஒளிரும் பிரதிபலிப்பான் அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Tags:    

Similar News