ஹெல்மெட் விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி
மயிலாடுதுறையில் நடைபெற்ற ஹெல்மெட் விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணியை காவல் ஆய்வாளர் அழகேசன், வட்டாரப் போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் ராம்குமார் ஆகியோர் கொடி அசைத்து தொடக்கி வைத்தனர்.;
Update: 2024-02-26 01:16 GMT
ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி
மயிலாடுதுறையில் ஹெல்மெட் விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.தாசரதி டிவிஎஸ் நிறுவனம் சார்பில் நடைபெற்ற பேரணியை மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் அழகேசன், வட்டாரப் போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் ராம்குமார் ஆகியோர் கொடி அசைத்து தொடக்கி வைத்தனர்.
இதில், நிறுவன ஊழியர்கள் தலைக்கவசம் அணிந்தவாறு பங்கேற்று நகரின் முக்கிய வீதிகளின் வழிபாக காவேரி நகர் வரை ஊர்வலமாக சென்று மீண்டும் நிறுவனத்தை அடைந்தனர். இதில், போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் மணவாளன் மற்றும் நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.