சங்கராபுரத்தில் இந்து முன்னணி ஆலோசனை கூட்டம்

Update: 2023-11-21 05:53 GMT

ஆலோசனை கூட்டம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சங்கராபுரத்தில்இந்து முன்னணி கூட்டம் நடந்தது. மாவட்ட பொதுச்செயலாளர் சக்திவேல் தலைமை தாங்கினார். செயலாளர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். ராமராஜன் வரவேற்றார். கூட்டத்தில் மாநிலச் செயலாளர் மணலி மனோகரன் சிறப்புரையாற்றினார். பிரகாசம், அஞ்சுகம், சக்திவேல், ஜோதிநாதன்,ரவிச்சந்திரன், மோகன், செந்தாமரை உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில், சங்கராபுரம் அடுத்த பூட்டை மாரியம்மன் கோவில் மதில் சுவரை புதுப்பிக்க வேண்டும். கோவில் உண்டியல் மற்றும் வாடகை, கடை ஏலம் முலம் கிடைக்கும் தொகையில் முறையாக கோவில் பராமரிப்பு பணிகளை செய்ய வேண்டும். ராவுத்தநல்லுார் ஆஞ்சநேய கோவில் திருப்பணியை விரைந்து முடிக்க அரசை வலியுறுத்துவது. பொரசப்பட்டு மலை ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Tags:    

Similar News