யானை ஊர்வலம் அனுமதி கேட்டு இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

கீழ்க்கரை கோவிலில் யானை ஊர்வலம் அனுமதி கேட்டு இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்.;

Update: 2024-03-06 04:59 GMT
ஆர்ப்பாட்டம் நடத்திய இந்து முன்னணியினர்
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி திருவிழாவை முன்னிட்டு அருகில் உள்ள கிராம கோவில்களில் இருந்து பக்தர்கள் யானை மீது சந்தனம் மற்றும் களபம் யானை மீது பவனியாக மண்டைக்காடு கோவில் கொண்டு செல்வது வழக்கம். இந்த ஆண்டு மண்டைக்காடு கோவிலுக்கு யானை பவனிக்கு வனத்துறை அனுமதி வழங்கப்படவில்லை. இதற்கிடையே மண்டைக்காடு கோவில் மாசி விழா மூன்றாம் நாளை முன்னிட்டு நேற்று கீழ்க்கரை பிடாகை சடையப்பர் கண்டன் சாஸ்தா கோவில் இருந்து பக்தர்கள் வழக்கம்போல் சந்தனக் குடம் பவனி செல்ல தயாராகினர். ஆனால் யானைக்கு அனுமதி வழங்கப்படாததால் பக்தர்களுக்கு ஆதரவாக மாவட்ட இந்து முன்னணி தலைவர் கிருஷ்ணகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் மிசா சோமன், மாவட்ட பொதுச் செயலாளர் ராஜேஸ்வரன், குருந்தன்கோடு ஒன்றிய செயலாளர் கண்ணன் உட்பட ஏராளமானவர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு  பின்னர் பக்தர்கள் சந்தனக் குடங்களை தரையில் சுமந்து மண்டைக்காடு கோயில் சென்றனர்.
Tags:    

Similar News