இந்து முன்னணி சேலம் மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம்
சங்ககிரியில் இந்து முன்னணி சேலம் மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டத்தில் நிர்வாகிகள் கலந்து கொண்டு பல தீர்மானங்கள் குறித்து விவாதித்தனர்
சேலம் மாவட்டம் சங்ககிரியில் இந்து முன்னணி சேலம் மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் சங்ககிரி அருகே உள்ள குப்பனூர் பாரதிய ஜனதா கட்சி கிழக்கு ஒன்றிய அலுவலக வளாகத்தில் மாவட்ட துணைத் தலைவர் சின்னுசாமி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். சேலம் கோட்டச் செயலாளர் பழனிசாமி கலந்து கொண்டு இந்து முன்னணி அமைப்பின் கொள்கைகள், கோட்பாடுகள் குறித்து விளக்கிப்பேசினார். மேற்கு மாவட்ட செயலாளர்கள் கோபிநாத், ரங்கராஜன், மணிகண்டன், ஒன்றிய, நகர நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் சேலம் மாவட்டம் முழுவதும் அதிகமான கிளை குழுக்களை அமைக்க நடவடிக்கை எடுத்தல், சங்ககிரி காவல் நிலையத்தில் அண்மையில் மர்ம பொருள் வெடித்தது குறித்து மத்திய புலனாய்வுத்துறை விசாரித்து உண்மை தன்மையை கண்டறிய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.