ஹிந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கம்: நாமக்கல் மாவட்ட நிர்வாகிகள் தேர்வு!

ஹிந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கத்தில் நாமக்கல் மாவட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2024-07-01 10:02 GMT
நாமக்கல் மாவட்ட ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்கத்திற்கு நாமக்கல் மாவட்ட பொறுப்பாளர்கள் தேர்வு நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் அருகில் உள்ள முல்லை மஹாலில் நடைபெற்றது.மாநில செயலாளர் சரவணன் முன்னிலை வகித்தார்.மாவட்ட ஆலோசனை குழு தலைவர் தயாளன் புதிய நிர்வாகிகளின் பெயர்களை வாசித்து அறிமுகம் செய்து வைத்தார். இதில் மாவட்ட தலைவராக நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில் அர்ச்சகர் வெங்கடேசன் பட்டாச்சாரியார், மாவட்ட பொது செயலாளராக புவனேஸ்வர், மாவட்ட பொருளாளராக மகேஷ் மற்றும் மாவட்ட துணை தலைவர், துணை செயலாளர், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மாவட்ட கமிட்டி நிர்வாகிகளாக பொறுப்பேற்று கொண்டனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆலயங்களில் உழவாரப்பணி, திரு விளக்கு பூஜை, சத்சங்கம்/ சமயவகுப்பு நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Tags:    

Similar News