விழுப்புரத்தில் இந்து இளைஞர் முன்னணி ஆர்ப்பாட்டம்

இந்து இளைஞர் முன்னணி சார்பாக, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2024-03-06 05:30 GMT

இந்து இளைஞர் முன்னணி சார்பாக, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


தமிழகத்தில் பெருகிவரும் போதை போராபத்தை தடுத்திட வலியுறுத்தி, இந்து இளைஞர் முன்னணி சார்பாக, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்து இளைஞர் முன்னணி ஒருங்கிணைப்பாளர் தியாகு தலைமை வகித்தார். இந்து இளைஞர் முன்னணி திருவெண்ணெய்நல்லூர் ஒன்றிய செயலாளர் ரஞ்சித் சிறப்புரையாற்றினார்கள். இந்து இளைஞர் முன்னணி காணை ஒன்றிய செயலாளர் மணிகண்டன் மகிழ்வுறையாற்றினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்து இளைஞர் முன்னணி ஒன்றிய நகர கிளை பொறுப்பாளர்கள் கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
Tags:    

Similar News