புரவி எடுப்பு விழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

அல்லூர் அருகே புரவி எடுப்பு விழா நடைபெற்ற நிலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

Update: 2024-03-21 07:14 GMT

அல்லூர் அருகே புரவி எடுப்பு விழா நடைபெற்ற நிலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்


சிவகங்கை மாவட்டம், அல்லூர் ஊராட்சிக்குட்பட்ட பையூர் கொடிகாடு கிராமத்தில் ஸ்ரீ மேற்கத்தி அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இக்கோயிலில் விநாயக பெருமான், முனீஸ்வரர் உடன் ஸ்ரீ பூர்வகலா, ஸ்ரீ புஷ்பகலா சமேத மேற்கத்தி அய்யனார் சுவாமிகளின் சன்னதி அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் பங்குனியில் புறவி எடுப்பு விழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

இதனை முன்னிட்டு நேர்த்திக்கடன் இருந்த பக்தர்கள் தங்கள் வீடுகளில் இருந்து மண்ணால் செய்யப்பட்ட குதிரையினை ஊர்வலமாக கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து ஸ்ரீ அய்யனார் ஆலயத்திற்கு வந்து அடைந்தனர். இவ்விழாவினை முன்னிட்டு கிராமத்தை சுற்றியுள்ள ஏராளமான பக்தர்கள் புரவி எடுப்பு விழாவில் கலந்துகொண்டு அய்யனார் சுவாமியை வழிபட்டு சென்றனர்.

Tags:    

Similar News