ஆற்காடில் இடி தாக்கி வீடு சேதம்: நிதியுதவி வழங்கிய நகரமன்ற தலைவர்
ஆற்காடு பகுதியில் இடி தாக்கியதில் வீடு சேதமான தகவல் அறிந்த நகர மன்ற தலைவர் நிதியுதவி வழங்கினார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-06-09 16:13 GMT
நிதியுதவி வழங்கிய நகர்மன்ற தலைவர்
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு சுற்றுவட்டார பகுதியில் நேற்று முன்தினம் இரவு பலத்த இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. இதில் ஆற்காடு நகராட்சி 11-வது வார்டுக்குட்பட்ட ஷர்புதீன் தெருவில் இடி தாக்கியதில் ஒரு வீடு சேதமடைந்தது.
இதுகுறித்த தகவல் அறிந்த ஆற்காடு நகரமன்ற தலைவர் தேவி பென்ஸ்பாண்டியன் நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி நிதியுதவி வழங்கினார்.
அப்போது முன்னாள் நகரமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பி.பென்ஸ்பாண்டியன், எஸ்.ஆர்.பி.துரை ஆகியோர் உடன் இருந்தனர். மேலும் தொடர்மழையின் காரணமாக ஆற்காடு வீட்டு வசதிவாரியம் பகுதி 1-ல் உள்ள தெருவில் இருந்த மரம் வேருடன் சாலையில் சாய்ந்தது. அதனை அதிகாரிகள் உத்தரவின் பேரில் உடனடியாக அகற்றப்பட்டது.