வீடு எரிந்து சேதம்; எம்எல்ஏ ஆறுதல்
தரங்கம்பாடி அடுத்த நெடுவாசலில் கூரை வீடு எரிந்து சேதமான நிலையில், பூம்புகார் எம்எல்ஏ நேரில் சென்று ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினார்.;
Update: 2023-12-25 13:32 GMT
தரங்கம்பாடி அடுத்த நெடுவாசலில் கூரை வீடு எரிந்து சேதமான நிலையில், பூம்புகார் எம்எல்ஏ நேரில் சென்று ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா சொம்பனார் கோவில் தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட நெடுவாசல் ஊராட்சி பட்டாவரம் கிராமத்தில் சௌந்தரராஜன்- நாகவல்லி என்பவரது கூரை வீடு திடீர் தீ விபத்தால் எரிந்து முழுவதும் சேதம் அடைந்தது. தகவல் அறிந்து வந்த மயிலாடுதுறை மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம் .முருகன் பாதிக்கப்பட்ட சௌந்தர்ராஜனுக்கு தனது சொந்த நிதியிலிருந்து ரூ.5000 மற்றும் நிவாரணமாக அரிசி மளிகைப் பொருட்கள் வழங்கி ஆறுதல் கூறினார். இதேபோல் தரங்கம்பாடி வட்டாட்சியர் சரவணன் அரசு நிதியிலிருந்து ரூ.5000 மற்றும் அரிசி புடவை வேட்டி மண்ணெண்ணெய் வழங்கினார். இதில் தஞ்சை மண்டல தகவல் தொழில் நுட்ப அணி பொறுப்பாளர் ஸ்ரீதர், ஒன்றிய செயலாளர் அப்துல்மாலிக் மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.