பாஜ வேட்பாளர் வீடுகளில் சோதனை செய்ய வேண்டும் - பொன் ராதாகிருஷ்ணன்

அனைத்து பாஜ வேட்பாளர் வீடுகளிலும் சோதனை செய்ய வேண்டும் என மாநில தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் கூறினார்.

Update: 2024-04-09 06:56 GMT

 அனைத்து பாஜ வேட்பாளர் வீடுகளிலும் சோதனை செய்ய வேண்டும் என மாநில தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் கூறினார். 

கன்னியாகுமரி மக்களவை தேர்தலில் பாஜ சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். புதுக்கடை பகுதியில் தாமரை சின்னத்திற்கு வாக்குகளை கேட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பொன்.ராதா கிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது.காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை சுதந்திரத்துக்காகபோராடிய மகாத்மா காந்தியின் பேரனா? அல்லது ஜவஹர்லால் நேருவின் பேரனா நாட் டிற்கு சுதந்திரம் பெற்றுதர போராடிய காமராஜரையே காங்கிரஸ் கட்சியை விட்டு துரத்திய இவர்களுக்கு பேச என்ன தகுதி உள்ளது . 

மொரார்ஜிதேசாய் போன்ற எத்தனையோ சுதந்திர போராட்ட தியாகிகள் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் சிறையில் அடைக்கபட்டனர். இது இந்திரா காங்கிரஸ். இவர்களுக்கு இதை பற்றி தகுதி இல்லை. முள்ளிவாய்கால் விவகாரத்தை மறந்துவிடமுடியுமா எத்தனை பெண்கள் மான பங்கபடுத்தபடுத்தி கொல லப்பட்டனர். காங்கிரஸ் கட்சியில் இருப்பதால் செல்வபெருந்தகையும் அதற்கு காரணமானவர் தான்.வேட்பாளர்களின் வீடுகள், நிறுவனங்களில் சோதனை செய்ய தேர்தல் ஆணையத்திடம் திமுக அணுகிய விவகாரத்தில் தயவு தெய்து நான் உட்பட அனைத்து பாஜக வேட்பாளர்களின் வீடுகளில் சோதனை செய்ய கேட்டுகொள்கிறேன்.

தேர்தல் பரப்புரை என்று சொல்லும் போது அனைவருக்கும் சரிசமமான வாய்ப்பு கொடுக்கவேண்டும். அவர்கள் பல இடங்களில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் போது பாஜக தலைவர்கள் தேர்தல் பிரசாரம் செய்தால் ஏன் கெட்டுபோகிறதா.பாரதிய ஜனதா தலைவர்களுக்கு ஏன் அனுமதி மறுக்கப்படுகிறது என அவர் கேள்வி எழுப்பினார். இந்த தேர்தல் பிரச்சாரத்தில் மாவட்ட தலைவர் தர்மராஜ் உட்பட பாஜக நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்

Tags:    

Similar News