எம்எல்ஏ தலைமையில் மனித சங்கிலி போராட்டம் !
இடங்கணசாலை நகராட்சி பேருந்து நிலையம் பகுதியில் எம்எல்ஏ தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.;
By : King 24x7 Angel
Update: 2024-03-12 09:13 GMT
மனித சங்கிலி போராட்டம்
மனித சங்கிலி போராட்டம்
சேலம் மாவட்டம் சங்ககிரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இடங்கணசாலை நகராட்சி பேருந்து நிலையம் முன்பு போதை பொருளை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் சங்ககிரி சட்டமன்ற உறுப்பினர் சுந்தர்ராஜன் தலைமையில் நடைபெற்றது. இதில் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு கையில் பதாகைகளை ஏந்தியபடி திமுக அரசுக்கு எதிரான பல்வேறு கண்டன கோஷங்களை எழுப்பி மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இடங்கணசாலை நகரச் செயலாளர் சிவலிங்கம் உட்பட அதிமுக நிர்வாகிகள் 500க்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர்.