எம்எல்ஏ தலைமையில் அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம்
பாப்பிரெட்டிபட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம்
Update: 2024-03-12 11:58 GMT
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட,கடத்தூர் பேரூராட்சி மற்றும் பொ.மல்லாபுரம் பேரூராட்சி மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி அதிமுக சார்பில், போதைப் பொருள் புழக்கத்தை உடனடியாக கட்டுப்படுத்த வலியுறுத்தியும் விடியா திமுக அரசைக் கண்டித்தும் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி தலைமையில் நடைபெற்றது. திமுக அரசை கண்டித்து பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டது இந்த நிகழ்வில் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஏராளமான அதிமுக நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.