மனித உரிமைகள் தின விழா உறுதிமொழி ஏற்பு
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு, கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விழாவில் அனைத்து துறை அலுவலர்களும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
சர்வதேச மனித உரிமைகள் தின விழா உறுதிமொழி ஏற்பு. கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று சர்வதேச மனித உரிமைகள் நாள் உறுதி மொழியினை மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் தலைமையில் ஏற்றுக் கொள்ள அனைத்து துறை அலுவலர்கள் எடுத்துக் கொண்டனர்.
இந்திய அரசியலமைப்புச்சட்டத்திலும், இந்தியாவில் செயல்படுத்தத்தக்க பன்னாட்டு சட்டங்களிலும் வரையறுக்கப்பெற்ற மனித உரிமைகள் குறித்து உண்மையுடனும், பற்றுறுதியுடனும் நடந்து கொள்வேன் என்று நான் உளமார உறுதி மொழிகிறேன். எவ்வித வேறுபாடுமின்றி, அனைவரின் மனித உரிமைகளை மதித்து நடப்பதுடன், மனித உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில். நான் என்னுடைய கடமைகளை ஆற்றுவேன். என்னுடைய எண்ணம், சொல் அல்லது செயல் மூலம், பிறருடைய மனித உரிமைகளை மீறுகிற எந்தவொரு செயலையும், நேரடியாகவோ மறைமுகமாகவோ செய்ய மாட்டேன்.
மனித உரிமைகள் மேம்படுத்துவதற்கு. நான் எப்போதும் ஆயத்தமாக இருப்பேன் என்று உளமாற உறுதி கூறுகிறேன் என அனைத்து துறை அலுவலர்களுடன் உடன் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) தண்டயுதாபாணி, மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.