மனிதநேய வார விழா - வெற்றி பெற்றவர்களுக்கு ஆட்சியர் பரிசு
விருதுநகர் மாவட்டத்தில் மனிதநேய வார நிறைவு விழாவில் மனிதநேய விழிப்புணர்வு குறித்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆட்சியர் ஜெயசீலன் பரிசுகளை வழங்கினார்;
Update: 2024-02-11 07:54 GMT
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பாக நடைபெற்ற மனிதநேய வார நிறைவு விழாவில் மனிதநேய விழிப்புணர்வு குறித்த கட்டுரை போட்டி பேச்சுப்போட்டி, பாட்டு போட்டி, நடனம், கவிதை ,ஓவியம், நாடகம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்த ஆதிதிராவிட நலப் பள்ளிகளை சார்ந்த மாணவ மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் பரிசுகளை வழங்கினார்