தூத்துக்குடியில் மனித நேய வார விழா நிறைவு

தூத்துக்குடியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நடந்த மனித நேய வார விழாவின் நிறைவு விழா மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி, தலைமையில் நடைபெற்றது.

Update: 2024-02-01 06:43 GMT

பரிசு வழங்கல் 

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் மனித நேய வார நிறைவு விழா மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தலைமையில் இன்று  நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தெரிவித்ததாவது: மனிதநேய வார விழாவனது தீண்டாமை ஒழிப்பிற்காகவும், மத நல்லிணக்கத்திற்காகவும் தன் இறுதி வாழ்நாள் முழுவதும் பாடுப்பட்ட தேசபிதா மகாத்மா காந்தியடிகளின் நினைவாக கொண்டாடப்பட்டு வருகிறது.  அண்ணல் காந்தியடிகள் மறைந்த தினமான இன்று மனிதநேய வார நிறைவுவிழா நிகழ்ச்சியானது தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. தமிழக அரசு உத்தரவிட்டதற்கிணங்க, ஒவ்வொரு ஆண்டும் தமிழகம் முழுவதும் ”தீண்டாமை ஒழிப்பு மனிதநேய வாரவிழா” ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையால், ஜனவரி 24 முதல் 30 வரை கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வாண்டு, ஜனவரி 24 முதல் 30 வரை தீண்டாமை ஒழிப்பிற்காக மனிநேய வாரவிழா தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 24.01.2024 அன்று தூத்துக்குடி பள்ளி மாணவர் விடுதியில் துவக்கவிழா நடைபெற்றது.
Tags:    

Similar News