நூற்றுக்கணக்கான மதுபாட்டில் : இருவரை கொத்தாக தூக்கிய போலீஸ்

வேலூர் மாநகரில் காரில் அரசு மதுபானங்களை கடத்தி வந்த இருவரை வேலூர் வடக்கு காவல் நிலைய போலீசார் கைது செய்துள்ளனர்.;

Update: 2024-03-18 11:32 GMT

கைது செய்யப்பட்டவர்கள் 

வேலூர் வடக்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அண்ணா கலையரங்கம் பகுதியில் வேலூர் வடக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் ஞாயிற்றுக்கிழமை இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்துள்ளனர்.

அப்போது அந்த வழியே வந்த காரில் போலீசார் சோதனை செய்துள்ளனர். அப்போது அரசு மது பாட்டில்கள் கடத்திவரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் மது பாட்டில்கள் மற்றும் மது பாட்டில்களை கடத்தி வந்த இருவருடன் காரை போலீசார் காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

Advertisement

இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் மது பாட்டில்களை கடத்தி வந்தவர்கள் வசந்தபுரம் பகுதியைச் சேர்ந்த மணிமாறன் மற்றும் விஷ்ணு என்பது தெரிந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் 336 மது பாட்டில்கள், 96 பீர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர். பின்னர் இன்று (18.03.2024) இருவரையும் வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தியுள்ளனர்.

அப்போது இருவரையும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்திரவிட்டதை தொடர்ந்து, இருவரும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News