மனைவி கண்டித்ததால் கணவன் தூக்கிட்டு தற்கொலை....
சிவகங்கையில் மனைவி திட்டியதால் கணவன் தூக்கிட்டு தற்கொலை - போலீசார் விசாரணை;
By : King 24x7 Angel
Update: 2024-04-06 06:50 GMT
வழக்கு பதிவு
சிவகங்கை பகவத் சிங் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் ராஜசேகரன் வயது (45). இவர் மது போதைக்கு அடிமையானவர் என கூறப்படும் நிலையில் மது அருந்திவிட்டு அடிக்கடி வீட்டில் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வழக்கம் போல் மது அருந்தி வீட்டிற்கு வந்ததாக கூறப்படும் நிலையில், கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனம் வெறுத்த கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக ராஜசேகரனின் மனைவி கவிதா சிவகங்கை தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்புகாரின் அடிப்படையில் சிவகங்கை தாலுகா காவல் நிலைய காவல் ஆய்வாளர் லிங்கபாண்டி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.