மனைவி பிரிந்த சோகத்தில் கணவன் தற்கொலை
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மனைவி பிரிந்த சோகத்தில் கணவன் தற்கொலை.
Update: 2024-02-25 05:42 GMT
கள்ளக்குறிச்சி மாவட்டம் சிறுவங்கூரைச் சேர்ந்தவர் முருகேசன் மகன் சவுந்தர், 32; இவர், இவரது மனைவி விஜயசாந்தி. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ஒரு ஆண்டாக பிரிந்து வாழ்கின்றனர். இதனால் மனமுடைந்த சவுந்தர் கடந்த 21ம் தேதி இரவு வீட்டில் துாக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார். உடன் அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.