குடும்ப பிரச்சனையால் கணவன் தீக்குளித்து தற்கொலை

விருதுநகர் மாவட்டம், மதுரை பெரியார் பூசலபுரம் பகுதியில் குடும்ப பிரச்சனை காரணமாக கணவன் தற்கொலை செய்து கொண்டசம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-04-03 09:54 GMT
சிவகாசி அருகே குடும்ப பிரச்சனையால் கணவன் தீக்குளித்து தற்கொலை...

விருதுநகர் மாவட்டம், மதுரை பெரியார் பூசலபுரம் பகுதியை சேர்ந்தவர் சங்கர் மகன் கிருஷ்ணன் (29). இவருக்கும் சிவகாசியை சேர்ந்த முத்துமாரி என்பவருக்கும் கடந்த இரண்டரை வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று உள்ளன. இவர்களுக்கு 16 மாத ஆண் குழந்தை உள்ளது. கிருஷ்ணன் சிவகாசி சுப்பிரமணியபுரம் காலனியில் குடும்பத்தோடு குடியிருந்து வந்து,கொத்தனார் வேலைக்கு சென்று வந்துள்ளார்.

குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி சாகப்போகிறேன் என்று கூறிவந்துள்ளார். சம்பவத்தன்று அடுப்பு எரிக்க கேனில் வைத்திருந்த மண்ணெண்னையே தனக்குத் தானே உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மனைவி முத்துமாரி, தீயை அணைத்து சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர்,அங்க சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.சம்பவம் குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News