மனைவி மாயம் - கணவர் போலீசில் புகார்

கள்ளகுறிச்சி மாவட்டம், சந்தைப்பேட்டை அருகே கடைக்கு செல்வதாக கூறி சென்ற மனைவி காணவில்லை என கணவன் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-01-07 12:24 GMT

மாயம் 

திருக்கோவிலுார், சந்தைப்பேட்டையைச் சேர்ந்தவர் சாந்தகுமார் மனைவி உமா( 25 )இவர்களுக்கு திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆகிறது. 2 ஆண் பிள்ளைகள் உள்ளனர். கடந்த 1ம் தேதி காலை 11:00 மணிக்கு கடைக்கு செல்வதாக கூறிச் சென்ற உமா வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து   சாந்தகுமார் அளித்த புகாரின் பேரில், திருக்கோவிலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News