காங்கிரஸ் தகவல் உரிமை சட்ட பிரிவு சார்பில் இப்தார் விருந்து
சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தகவல் உரிமை சட்ட பிரிவு சார்பில் நடந்த இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.;
Update: 2024-03-18 06:12 GMT
இப்தார் விருந்து
சேலம் மாநகர் மாவட்ட தகவல் உரிமை சட்ட பிரிவு காங்கிரஸ் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சேலம் காரைக்கிணறு ஜலால்புறாவில் நடந்தது. நிகழ்ச்சியில் தகவல் உரிமை சட்ட பிரிவு மாநில தலைவர் கனகராஜ், மாநில பொருளாளர் விஜய், மாவட்ட தலைவர் அப்துல் தாஜூம், மாவட்ட செயலாளர் பாபு, சிறுபான்மை பிரிவு மாநில துணைத்தலைவர் முகமது யாகூப், பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாநில பொதுச்செயலாளர் முகமது அலி, சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் பர்வேஸ், மாநகர துணைத்தலைவர் முகமது யூசுப் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஜாவித் நன்றி கூறினார்.