செயற்கை புல் மைதானத்தை திறந்து வைத்தாய் ஐ.ஜி

புதுக்கோட்டை லட்சுமிபுரம் இரண்டாம் வீதியில் எழுவர் கிரிக்கெட், கால்பந்து விளையாட்டு செயற்கை புல் தளத்தினை திருச்சி காவல்துறை ஐ.ஜி திறந்து வைத்தார்.

Update: 2024-02-01 08:33 GMT

புதுக்கோட்டை லட்சுமிபுரம் இரண்டாம் வீதியில் எழுவர் கிரிக்கெட், கால்பந்து விளையாட்டு செயற்கை புல் தளத்தினை திருச்சி காவல்துறை ஐ.ஜி திறந்து வைத்தார். புதுக்கோட்டை நகராட்சி அலுவலகம் எதிரே உள்ள லட்சுமிபுரம் இரண்டாம் வீதியில் புதிதாக அமைக்கப்பட்டிருந்த தனியார் செயற்கை புல் விளையாட்டு மைதாதத்தை திருச்சி மண்டல காவல்துறை தலைவர் ஜி. கார்த்திகேயன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு திறந்து வைத்தார். நகர் பகுதியில் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த செயற்கை புல் தளம் அமைக்கப்பட்டுள்ளது .

இதில் கிரிக்கெட் ,கால்பந்து போட்டிகள் நடத்தும் வகையில் செயற்கை புல் தளம் அமைக்கப்பட்டுள்ளது இதில் ஆர்வமுடன் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் விளையாடலாம் . இந்த விளையாட்டு தளம் அமைத்த உரிமையாளர் ஷேக் அப்துல்லா தெரிவிக்கையில் சென்னை, மும்பை, டெல்லி, கோயமுத்தூர் ஆகிய நகரங்களில் இது போன்ற செயற்கை புல் தளங்கள் உள்ளன. ஆனால் பின்தங்கிய மாவட்டமான நமது புதுக்கோட்டை மாவட்ட வீரர்களும் இது போன்ற மைதானத்தில் விளையாட வேண்டும் என்ற என்னத்தில் அமைக்க பட்டதாக தெரிவித்தார் பின்னர் பேசிய. திருச்சி மண்டல காவல்துறை தலைவர் ஜி கார்த்திகேயன் இந்த மைதானத்தை பார்க்கவே மிக அழகாக உள்ளது இரவு நேரத்தில் விளையாடும் அளவிற்க்கு மின்னோலி அமைக்கப்பட்டது என தெரிவித்தார் பின்னர் கால்பந்தை உதைத்தும் , கிரிக்கெட் போட்டியை கிரிக்கெட் பேட்டால் பந்தை அடித்தும் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான விளையாட்டு வீரர்கள், காவல் துறையினர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News