பனவடலிசத்திரம் காவல் துறையினருக்கு தென்மண்டல ஐஜி பாராட்டினார்

தென்காசி மாவட்டம், பனவடலிசத்திரம் பகுதியில் நடைபெற்ற திருட்டு சம்பவத்தை விரைந்து கண்டுபிடித்த காவல் துறையினருக்கு தென்மண்டல ஐஜி பாராட்டினார்.

Update: 2024-04-06 13:05 GMT
பனவடலிசத்திரம் காவல் துறையினருக்கு தென்மண்டல ஐஜி பாராட்டினார்

தென்காசி மாவட்டம் பனவடலிசத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தெற்கு பனவடலிசத்திரம் நேதாஜி நகர் பகுதியில் வசித்து வரும் கஸ்தூரி மற்றும் அவரது கணவர் கடந்த 02. 04. 2024 அன்று ஆராய்ச்சி பட்டியிலுள்ள தனது உறவினரின் வீட்டிற்கு சென்றனர். அவர்கள் மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டிலிருந்த 58 பவுன் தங்க நகைகள் மற்றும் 100 கிராம் வெள்ளி நகைகளை வீட்டின் கதவை உடைத்து யாரோ திருடி சென்றுள்ளனர்.

இதுகுறித்து காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில், குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய தென்காசி மாவட்ட காவல் கண்காணிப் பாளர் சுரேஷ்குமார் உத்தரவிட்டதின் பேரில் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் திருட்டில் ஈடுபட்டது பனவடலிச்சத்திரம் சொக்கலிங்கபுரம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் மகன் கார்த்திக்(28), மாடசாமி என்பவரின் மகன் குமார் @ கொம்பன் குமார்(38), சுத்தமல்லி கருமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முத்தையா என்பவரின் மகன் வேல்முருகன் (50) மற்றும் தேவர்குளம் செல்வராஜ் என்பவரின் மனைவி சரோஜா (37) ஆகியோர் என தெரிய வந்தது.

இவர்களை போலீசார் நேற்று கைது செய்தனர். இவ்வழக்கில் குற்றவாளிகளை 24 மணி நேரத்திற்குள் கைது செய்த காவல்துறையினருக்கு தென்மண்டல ஐஜி டாக்டர் கண்ணன், தென்காசி மாவட்ட எஸ் பி சுரேஷ்குமார் ஆகியோர் பாராட்டு சான்றிதழ் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Tags:    

Similar News