இலஞ்சி சிற்றாற்று வீரியம்மன் கோயில் கொடை விழா
இலஞ்சி சிற்றாற்று வீரியம்மன் கோயில் கொடை விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.;
Update: 2024-02-01 08:57 GMT
தென்காசி மாவட்டம் இலஞ்சியில் மிகவும் பிரசித்தி பெற்ற தேவி ஸ்ரீ சிற்றாற்று வீரியம்மன் கோயில் கொடை விழா நடைபெற்றது. இக்கோயிலில் ஆண்டுதோறும் 7 நாள்கள் அனைத்து சமுதாய சாா்பில் கோயில் கொடை விழா நடைபெறும். நிகழாண்டில் கடந்த 23ஆம் தேதி முதல் விழா தொடங்கியது. இதில், நாள்தோறும் ஒவ்வொரு சமுதாயம் சாா்பில் நையாண்டி மேளம், வாடிப்பட்டி மேளம், செண்டை மேளத்துடன் பால்குட ஊா்வலம், பிற்பகலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, பக்தா்களுக்கு அன்னதானம் ஆகியவை நடைபெற்றது.