நெமிலி: 1½ கிலோ கஞ்சா பறிமுதல்
நெமிலி அருகே கஞ்சா வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
By : King 24X7 News (B)
Update: 2024-05-17 17:00 GMT
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அருகே உளியநல்லூர் பகுதியில் நேற்று நெமிலி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லோகேஷ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் நின்று கொண்டிருந்த நபரை சந்தேகத்தின்பேரில் பிடித்து போலீசார் சோதனை செய்தனர்.
சோதனையில் அவரிடம் 1½ கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.தொடர்ந்து விசாரணையில் பிடிபட்ட நபர் மத்திய பிரதேச மாநிலம், சுரத் சிதி பகுதியை சேர்ந்த ராம்கிஷோர் (36) என்பதும், உளியநல்லூர் வழியே புதிதாக அமைக்கப்படும் சென்னை-பெங்களூரு அதிவிரைவு சாலை அமைக்கும் பணியில் வேலை செய்துவருவதும் தெரியவந்தது இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த நெமிலி போலீசார் வழக்குப்பதிவு செய்து ராம் கிஷோரை கைது செய்தனர்.