அரவக்குறிச்சி: சட்டவிரோதமாக கள் விற்பனை
அரவக்குறிச்சியில் சட்டவிரோதமாக கள் விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-11 15:35 GMT
கோப்பு படம்
,அரவக்குறிச்சி காவல் எல்லைக்குட்பட்ட வெஞ்சமா கூடலூர் பகுதியில், சட்டவிரோதமாக கள் விற்பனை நடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் காவல் உதவி ஆய்வாளர் திருநாவுக்கரசு வெஞ்சமாங்கூடலூர் பகுதியில் நேற்று காலை 8 மணி அளவில் ரோந்து பணியில் ஈடுபட்டார்.
அப்போது அருகில் உள்ள அண்ணா நகர் பகுதியில் கந்தசாமி என்பவரது தோட்டத்தில் கள் விற்பனை நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சட்டவிரோத கள் விற்பனையில் ஈடுபட்ட விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் வயது 53 என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து, விற்பனைக்கு வைத்திருந்த 2 லிட்டர் கள்ளை பறிமுதல் செய்தனர்.