சட்டவிரோத மது விற்பனை - 3 பேர் கைது
கடத்தூர் அருகே தர்மபுரி - பொம்மிடி சாலையில் மதுபானங்களை பதுக்கி விற்பனை செய்ய கொண்டு சென்ற 3 பேரை கைது செய்த போலீசார் கடத்தலுக்கு பயன்பட்ட இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
Update: 2024-03-19 08:33 GMT
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கடத்தூர் காவல் நிலைய எல்லை பகுதிகளான தர்மபுரி, பொம்மிடி சாலையில் வாகன தணிக்கை நடைப்பெற்றது. அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் அவ்வழியாக வந்தவர்களை நிறுத்தி, உதவி காவல் ஆய்வாளர் புவனேஸ்வரி சோதனை நடத்தினார்.அதில் மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்க, பதுக்கி கொண்டு சென்றது தெரிய வந்தது. இதயைடுத்து அஸ்திகரியூர் தர்மலிங்கம், மணியம்பாடி பாபு, சுங்கர அள்ளி வெள்ளையம்மாள் ஆகிய 3 பேரை காவலர்கள் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 78 மதுபாட்டில்கள் மற்றும் 3 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.