கரூரில் சட்டவிரோத மது விற்பனை
கரூரில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுப்பட்டவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.;
சட்டவிரோத மது விற்பனை
கரூர் மாநகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், சட்டவிரோத மது விற்பனை நடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், கரூர் காவல்துறையினர் மே 24ஆம் தேதி காலை 8 மணி அளவில், கரூர் மாநகர பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கரூர்- கோவை சாலையில் உள்ள ப்ளூ ஸ்டார் பாரில், சட்டத்துக்கு புறம்பாக மது விற்பனை நடப்பது கண்டறியப்பட்டது.
இந்த மது விற்பனையில் ஈடுபட்ட புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் விக்னேஸ்வரன் என்பவரை கைது செய்து, அவர் விற்பனைக்கு வைத்திருந்த பல்வேறு வகையான 92 குவாட்டர் மது பாட்டில்களையும், பிளாக் பேர்ல் பீர் 19 பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். மேலும்,இது தொடர்பாக விக்னேஸ்வரன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் கரூர் மாநகர காவல் துறையினர்.