நத்தம் அருகே மது விற்ற இரண்டு பேர் கைது
திண்டுக்கல் மாவட்டம், சேத்தூரில் அனுமதியின்றி மது விற்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.;
Update: 2024-02-19 00:13 GMT
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அடுத்துள்ள சேத்தூர் பகுதியில் அரசு அனுமதியின்றி மது விற்பனை நடப்பதாக நத்தம் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் காவல் ஆய்வாளர் தங்கமுனியசாமி, உதவி காவல் ஆய்வாளர் தர்மர் தலைமையில் போலீஸார் சேத்தூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது கோழிப்பண்ணை அருகே சேத்தூரை சேர்ந்த ஆறுமுகம் (63), முருகன் (41) ஆகியோர் மது விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீஸார் அவர்களிடமிருந்து 54 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.