சட்டவிரோத லாட்டரி டிக்கெட் விற்பனை: இருவர் கைது
கரூரில் சட்டவிரோத லாட்டரி டிக்கெட் விற்பனை செய்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கள்ள லாட்டரி டிக்கெட் விற்பனை நடப்பதாக சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சதீஷ்குமாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில், மே 11ம் தேதி காலை 10:30 மணி அளவில், மாநகரப் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது கச்சேரி பிள்ளையார் கோவில் அருகே, தடை செய்யப்பட்ட கள்ள லாட்டரி டிக்கெட் விற்பனை நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விற்பனையில் ஈடுபட்ட, கரூர்,மேட்டு தெருவை சேர்ந்த சுகுமார் என்பவரும், வெங்கமேடு, தங்க நகர் பகுதியைச் சேர்ந்த சாதிக் என்பவரையும் கைது செய்து, அவர்கள் விற்பனைக்கு வைத்திருந்த நான்கு லாட்டரி டிக்கெட்டுகளையும், விற்பனை செய்து கையில் வைத்திருந்த ரூபாய் 150-ஐயும் பறிமுதல் செய்தனர்.
இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், பின்னர் அவர்களை காவல் நிலைய பிணையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் கரூர் மாநகர காவல் துறையினர்.