சட்டவிரோதமாக புகையிலை விற்பனை -இருவர் மீது வழக்கு பதிவு

கொல்லங்கோடு பகுதியில் புகையிலை விற்பனை செய்த இருவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-06-28 05:18 GMT

புகையிலை விற்பனை 

கொல்லங்கோடு பகுதி களில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலை அடுத்து இன்ஸ் பெக்டர் தாமஸ் தலைமையி லான போலீசார் கடைகளில் திடீர் சோதனை மேற்கொண் டனர். மிக்கேல் காலனி பகுதியில் உள்ள ஒரு பெட்டிக் கடையில் வைத்திருந்த 45 பாக்கெட் புகையிலையை பறிமுதல் செய்த போலீசார் அந்தோணியம்மாள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

நடைக்காவு பகுதியில் ஒரு கடையில் வைத்திருந்த 32 பாக்கெட் புகையிலை பாக் கெட்டுகளை பறிமுதல் செய்து ஆலங்கோடு பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News