உடல் நலக்குறைவு - மன்சூர் அலிகானுக்கு ஐசியூவில் சிகிச்சை

உடல்நல குறைவு காரணமாக நடிகர் மன்சூர் அலிகான் சென்னை கே கே நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஐசியூ பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Update: 2024-04-18 03:18 GMT

சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நடிகர் மன்சூர் அலிகான்

வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அவர், கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக அங்கு தீவிரப் பரப்புரையில் ஈடுபட்டார். நேற்று அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் குடியாத்தம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கே.கே.நகரில் உள்ள கே.எம். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். நடிகர் மன்சூர் அலிகானுக்கு ஐ சி யு வில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.‌
Tags:    

Similar News