மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடி தீர்வு - ஆட்சியர் அதிரடி

பெரம்பலூரில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனுக்களுக்கு உடனடி தீர்வாக மாற்றுத்திறனாளிகள் இருவருக்கு ஆட்சியர் கற்பகம் மூன்று சக்கர வண்டிகளை வழங்கினார்.

Update: 2024-03-05 05:40 GMT

மூன்று சக்கர வண்டிகள் வழங்கிய ஆட்சியர் 

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் கற்பகம் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மார்ச் 4ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், மூன்று சக்கர வண்டி கேட்டு மனு கொடுத்த மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், 10 நிமிடத்திற்குள் 2 மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வண்டிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்.

மேலும், பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, தொழில் தொடங்க கடன் உதவி, வீட்டுமனைப்பட்டா, விதவை உதவித்தொகை, ஆதரவற்ற விவசாயக் கூலி உதவித்தொகை, பட்டா மாறுதல், கல்விக் கடன் கோருதல், இலவச தையல் இயந்திரம் கோருதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 378 மனுக்கள் பெறப்பட்டது. இந்நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லலிதா, ஊராட்சிகள் உதவி இயக்குநர் வீரமலை, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் கார்த்திக்கேயன், உள்ளிட்ட அனைத்து துறைகளின் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News